Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் நடிகர் ஷாருக்கான்!

09:58 PM May 23, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் ஷாருக்கான் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் குவாலிபையர் ஐபிஎல் போட்டியைக் காண்பதற்காக நடிகரும், கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான், நரேந்திர மோடி மைதானத்திற்கு தனது குடும்பத்துடன் வந்தார். இப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நேரடியாக இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்களுக்கு ஐடிசி நர்மதா ஹோட்டலில் சிறப்பான வரவேற்பு கொடுத்தார் ஷாருக்கான். இந்நிலையில், நேற்று மதியம் திடீரென உடல் உச்ச வெப்பநிலையால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல் வெளிவந்திருந்தது.

இந்நிலையில், இன்று ஷாருக்கானின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், உடல்நிலை குணமடைய போதுமான ஓய்வெடுக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்திய தகவல் வெளியானது.

இதனை அடுத்து, ஷாருக்கானின் உதவியாளர் தனது எக்ஸ் பக்கத்தில், “ஷாருக்கானின் ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகள் அனைவருக்கும் நன்றி; அவர் நன்றாக இருக்கிறார்; உங்கள் அன்பு, பிரார்த்தனை மற்றும் அக்கறைக்கும் நன்றி.” என்று பதிவிட்டிருந்தார்.

https://x.com/pooja_dadlani/status/1793578282316636584

இந்நிலையில், நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Tags :
Ahmedheat strokehospitalnews7 tamilNews7 Tamil UpdatesShahrukh Khan
Advertisement
Next Article