Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பழம்பெரும் நடிகர் ரவிக்குமார் காலமானார்!

நடிகர் ரவிக்குமார் சென்னையில் இன்று காலமானார். 
03:22 PM Apr 04, 2025 IST | Web Editor
Advertisement

கேரளத்தில் பிறந்த நடிகர் ரவிக்குமார் மலையாள திரைப்படமான லக்ஷப் பிரபு என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கே.பாலச்சந்தர் இயக்கிய 'அவர்கள்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரவிக்குமார் பகலில் ஓர் இரவு, யூத், ரமணா, லேசா லேசா, சிவாஜி போன்ற பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

Advertisement

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகன், துணை நடிகர் பாத்திரங்களில் நடித்த ரவிக்குமார் சின்னத் திரையிலும் பிரபலமான நடிகராக இருந்தார். சித்தி, செல்வி போன்ற பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரவிக்குமார் இன்று காலை 10 மணியளவில் காலமானார். இதனை, அவரது மகன் உறுதிப்படுத்தியுள்ளார். வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் ரவிக்குமாரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். திரைத் துறையைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
actorcinemaRavikumar
Advertisement
Next Article