Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது, எங்களுடைய நட்பு எப்போதும் தொடரும்" - #ActorRajinikanth பேட்டி!

12:15 PM Aug 26, 2024 IST | Web Editor
Advertisement

துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர், அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது, எங்களுடைய நட்பு எப்போதும் தொடரும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

Advertisement

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” என்ற நூலை சென்னை‌ கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்‌ வெளியிட்டார். இந்நிகழ்வில் முதல் நூலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். மேலும் இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது :

"நான் ஆச்சரியப்படுகிற விஷயம், ஒரு பள்ளி ஆசிரியருக்கு புதிய மாணவர்களால் எந்த பிரச்னையும் இல்லை. பழைய மாணவர்களை தான் சமாளிக்க முடியாது. இந்தப் பழையவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வகுப்பைவிட்டு செல்லாமல் இருப்பவர்கள். இங்கும் ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கின்றனர். அதிலும், துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணில் விரல்விட்டு ஆட்டியவர். இவர்களையெல்லாம் வைத்து கலைஞர் எப்படித்தான் சமாளித்தாரோ. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உங்களுக்கு என் வாழ்த்துகள்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதைக்கேட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்பட அரங்கத்தினர் அனைவரும் சிரித்தனர். இதனிடையே காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் திருமுருக கிருபானந்த வாரியாரின் 119 ஆவது பிறந்த நாள் விழாவில் நேற்று பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் ரஜினிகாந்த் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

இதையும் படியுங்கள் : 14 உணவகங்கள் பெயரில் ஒரு கடை | #Swiggy-ல் ஆர்டரில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அதற்கு பதிலளித்த துரைமுருகன் கூறியதாவது :

"மூத்த நடிகர்களெல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால் தான் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்து விட்டு ஏதோ பேசுகிறார் ரஜினிகாந்த்" இவ்வாறு துரைமுருகன் பதிலளித்தார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த்திடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு, "துரைமுருகன் நீண்டகால நண்பர்.அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. நட்பு எப்போதும் தொடரும்" என தெரிவித்தார்.

Tags :
ChennaiCMOTamilNaduduraimuruganevveluKarunanidhiMKStalinRajinikanth
Advertisement
Next Article