Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவை அழைத்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

01:09 PM Mar 30, 2024 IST | Web Editor
Advertisement

"மஞ்சும்மல் பாய்ஸ்" படக்குழுவை நேரில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

Advertisement

சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர்,  ஸ்ரீநாத் பாசி,  பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம்  ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார்.  இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது.  2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள்,  ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியாகியுள்ள இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர்.  குணா குகையில் நடக்கும் கதை என்பதால் கமல் நடித்த குணா பட பாடலான ‘கண்மணி அன்போடு காதலன்...’ பாடலை படக்குழு படத்தில் முக்கியமான இடத்தில் பயன்படுத்தியிருந்தது.  அது தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.  மேலும் தமிழ்நாட்டிலும் சென்னை,  கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் படத்தை திரையிட திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.

இப்படத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார்.  இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சென்னை வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு அவரை நேரில் சந்தித்துப் பேசினர்.  இதனிடையே கமல்ஹாசன் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார்.  இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இப்படம் பேசுபொருளாகவே மாறி, இப்படத் தாக்கத்தினால் சுற்றுலா விரும்பிகள் பலரும் குணா குகையை நோக்கிப் படையடுத்து வந்தனர்.

இதையடுத்து உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனை படைத்தது.  இதையடுத்து தெலுங்கில் அடுத்த மாதம் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்த நிலையில் ரஜினி மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
Tags :
cinemaManjummel BoysmollywoodmovieottRajinikanth
Advertisement
Next Article