Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் பிரபாஸின் #Sprit திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் தம்பதி!

07:57 AM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

பிரபாஸின் நடிக்கவுள்ள ஸ்பிரிட் படத்தில் பிரபல பாலிவுட் தம்பதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரபாஸின் கல்கி 2898 ஏடி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் பிரபாஷ்  தி ராஜ் சாப் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு பின்னர்  அனிமல் பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

அர்ஜுன் ரெட்டி, அனிமல் திரைபடங்கள் மூலம் இந்திய திரையுலகில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் வங்கா. அனிமல் திரைப்படத்துக்குப் பிறகு தற்போது நடிகர் பிரபாஸுக்காக ஸ்பிரிட் எனும் கதையை எழுதி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இப்படத்தில் பாலிவுட் பிரபலங்களான சயிப் அலிகான் மற்றும் கரீனா கபூர் சந்தீப் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேவரா படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகியுள்ள சயிப் அலிகானுக்கு மீண்டும் ஒரு தெலுங்கு படம் அமைந்திருக்கிறது. நடிகை த்ரிஷாவும் இதில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் தேவரா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சந்தீப் வங்கா பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.

சீதா ராமம் படம் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில் சீதாராமம்  வெற்றிப்படத்தின் இயக்குநரான ஹனு ராகவபுடி தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. இந்த புதிய படத்தின் பூஜை தொடங்கி படப்பிடிப்பு துவங்கியுள்ளதை பிரபல தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Kareena KapoorPrabhasSaif Ali KhanSandeep Reddy Vanga
Advertisement
Next Article