Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் நிதியுதவி! எவ்வளவு தெரியுமா?

03:47 PM Apr 29, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சங்கம் கட்டட பணிகளுக்காக  நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி வழங்கினார்.

Advertisement

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.  பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது.  இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்கப் பொருளாளர் கார்த்தி 67ஆவது சங்க பொதுக்குழு கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள் : லோகேஷ் கனகராஜின் ’கூலி’ பட ட்ரெய்லரை பற்றி விமர்சனம் – இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம்!

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.  பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார்.  மேலும், நடிகர் விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாகவும்,  நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இதனிடையே கடந்த 22 ஆம் தேதி சங்கத்தின் புதிய கட்டடப் பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது.  பூஜை விழாவில்,  சங்கத்தின் தலைவர் நாசர்,  பொருளாளர் கார்த்தி, துணைத்  தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளைத் தொடர்வதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது . இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

நடிகர் சங்கம் சார்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

“தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன்,  சங்க கட்டட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- வைப்பு நிதியாய் வழங்கினார்.  அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை  தெரிவித்துக் கொள்கிறது”

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
Actor NapoleonActors SangamActors Sangam Building WorksChennaiFundedNadigar Sangam
Advertisement
Next Article