Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் #Manikandan பிறந்தநாள்... போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ‘குடும்பஸ்தன்’ படக்குழு!

05:07 PM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு, புதிய போஸ்டரை வெளியிட்டு ‘குடும்பஸ்தன்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Advertisement

ஜெய்பீம், குட் நைட் உட்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும், ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். திரைக்கதை, வசனத்தைப் பிரசன்னா பாலச்சந்திரன் எழுதியுள்ளார்.

சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்துக்கு வைஷாக் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தில் சான்வி மேக்னா நாயகியாக நடிக்கிறார். மேலும், குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்துக்கு ‘குடும்பஸ்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு நேற்று வெளியிட்டது.

ஒரு குடும்பஸ்தனாக பல்வேறு வேலைகளை செய்யும் மணிகண்டனின் வேலைப்பளுவை குறிப்பிடும் வகையில் சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்டது போஸ்டர். ‘குட்நைட்’ படத்துக்குப் பிறகு மீண்டும் ஃபேமிலி ஆடியன்ஸை நோக்கி திரும்பியுள்ளார் மணிகண்டன். இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மணிகண்டனுக்கு வாழ்த்து தெரிவித்து புது போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags :
cinema updateFirst LookHBD ManikandanKudumbasthanManikandannews7 tamilPosterRajeswar KaliswamyVinoth kumar
Advertisement
Next Article