Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்!

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்.
01:29 PM May 05, 2025 IST | Web Editor
Advertisement

80-களில் தொடங்கி இன்று வரை அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி.
நடிகர் கவுண்டமணி சுமார் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 10 திரைப்படங்களில் கதாநாயகனாகவும் தோன்றியுள்ளார். நடிகர் செந்திலுடன் இவர் இணைந்து நடித்த படங்கள் வசூலை வாரிக்குவித்தன. கரகாட்டக்காரன், சின்னக்கவுண்டர், உள்ளத்தை அள்ளித் தா, மேட்டுக்குடி, நடிகன், மன்னன், இந்தியன் என கவுண்டமணி நடித்த படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

Advertisement

இதையும் படியுங்கள் : பேசுவதை நிறுத்திய மாணவி… சக மாணவன் செய்த கொடூர செயல்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

நடிகர் கவுண்டமணி 1963ம் ஆண்டு சாந்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இறுதிச் சடங்குகளுக்காக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில், அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
actor Goundamanigoundamaninews7 tamilNews7 Tamil UpdatesRIPShanthitamil cinema
Advertisement
Next Article