Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“தனுஷ் 51” திரைப்படத்தின் இசையமைப்பாளர் இவரா?

07:52 PM Jan 20, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் தனுஷ் - 51 திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கோலிவுட் திரையில் அறிமுகமாகி ஹாலிவுட் சினிமாவில் நடிக்கும் அளவிற்கு நடிகர் தனுஷ் உருவெடுத்திருக்கிறார். இவர் அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ”கேப்டன் மில்லர்”  திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

மேலும் இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து, இந்த திரைப்படம் 6 நாட்களில் ரூ.59 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் இயக்கி, நடித்த இவரின் 50வது படம் வெளியாகவுள்ளது.

இதையும் படியுங்கள் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பிரதமர் மோடி!

இந்நிலையில்,  தனுஷ் 51-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17-ம் தேதி  பூஜையுடன் துவங்கியுள்ளது. இத்திரைப்படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளது. இப்படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார். மேலும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதையடுத்து, இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Captain MillerDhanushDhanush 51movie updatenagarjunaSekhar Kammula
Advertisement
Next Article