Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் அருள்மணி மாரடைப்பால் காலமானார்...

10:26 AM Apr 12, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த குணச்சித்திர நடிகர் அருள்மணி நேற்று  மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு வயது 65. 

Advertisement

தமிழில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அருள்மணி.  அழகி,  தென்றல்,  தாண்டவகோனே போன்ற பல்வேறு திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.  அரசியல் மேடை, இயக்குநர் பயிற்சி பள்ளி என பல பணிகளில் ஈடுபட்டு வந்தார்.  அதிமுகவில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

மக்களவை தேர்தலை முன்னிட்டு,  கடந்த 10 நாட்களாக அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.  இந்நிலையில் சென்னை திரும்பிய இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பாட்டார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.  இவரின் இறப்பு அதிமுகவினர் மற்றும் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
actorADMKArulmanitamil cinema
Advertisement
Next Article