நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி!
பாரதிராஜா மகன் மனோஜின் இறுதி சடங்கில் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...
10:06 AM Mar 26, 2025 IST
|
Web Editor
Advertisement
தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 48. தமிழ் திரையுலகில் நடிகர், உதவி இயக்குநர், இயக்குநர் என பல நிலைகளில் பணியாற்றியிருந்த மனோஜ், மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
அவரின் மறைவிற்கு திரையுலகினர், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடந்தவாறே வந்து தனது நெருங்கிய நண்பரான மனோஜ் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Next Article