Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்!

நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது...
06:42 PM Apr 28, 2025 IST | Web Editor
Advertisement

பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.

Advertisement

இந்த சூழலில் 2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதன்படி நடிகரும், கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார்,  தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது.

மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு பதம பூஷன் விருது வழங்கி கௌரவித்தார்.

Tags :
Actor Ajith KumarDroupadi MurmuPadma Bhushan Awardrashtrapati bhavan
Advertisement
Next Article