Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிக்பாஸ் வீட்டில் அதிரடி மோதல்! இன்றைய ப்ரோமோ வெளியான நிலையில் ரசிகர்கள் ஆர்வம்!!

04:16 PM Nov 15, 2023 IST | Web Editor
Advertisement

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் விஷ்ணுவுக்கும்,  தினேஷுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது போன்ற காட்சி வெளியாகி ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. 

Advertisement

கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஐஷு வெளியேற்றப்பட்டார்.  இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,  கடந்த வாரங்களை போல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என வீடுகள் பிரிக்கப்படாமல் இந்த வாரம் ஒரே பிக் பாஸ் வீடாக உள்ளது. இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஷ்ணுவும், தினேஷும் மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியான நிலையில், இரண்டாவது ப்ரோமோவிலும் இருவரும் அவேசமாக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதில், விஷ்ணுவை பார்த்து தினேஷ், ப்ரோமோ பொறுக்கி என்று கூறுகிறார்.  அதற்கு ஆத்திரமடையும் விஷ்ணு, காலால் அருகில் இருந்த பொருளை உதைக்கிறார்.  இந்த சண்டையை சக போட்டியாளர்கள் விலக்க முயற்சி செய்வதாக காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.  இந்த சண்டை உண்மையா அல்லது சீக்ரெட் டாஸ்க் ஏதும் கொடுக்கப்பட்டதா என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும். எப்படியிருந்தாலும் இன்றைய ப்ரோமோ விடியோவை பார்க்கும் போது இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்

Tags :
#Vishnu Vijay | #News7Tamil | #News7TamilUpdatesBig BossBig boss Season7ContestantDineshKamal haasan
Advertisement
Next Article