‘இட்லி கடை’ திரைப்படத்தில் அதிரடி மாற்றமா? - முக்கிய கதாபாத்திரத்தை குறிவைத்த #Dhanush!
தனுஷ் ராயன் படத்திற்கு பிறகு இட்லி கடை என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் தற்போது தனுஷ் மிகப்பெரிய மாற்றத்தை செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
தனுஷ் தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் இட்லி கடை என இரு படங்களை இயக்கி வருகின்றார். இதில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் முழுக்க முழுக்க இளம் நடிகர்களை வைத்து உருவாக்கி வருகின்றார் தனுஷ். தன் அக்கா மகனை இப்படத்தின் மூலம் தனுஷ் ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கின்றார். இதற்கிடையில் தனுஷ் தன் அடுத்த படத்தையும் துவங்கியுள்ளார். தனுஷ் இயக்கும் நான்காவது திரைப்படமான இட்லி கடை என்ற படத்தின் படப்பிடிப்பு தேனியில் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ராயன் என்ற அதிரடியான ஆக்ஷன் படத்தை இயக்கி வெற்றிகண்ட தனுஷ் அடுத்ததாக ஒரு பீல் குட் படத்தை இயக்கி வருகின்றார். திருச்சிற்றம்பலம் படத்தை போல ஒரு பீல் குட் படமாகவே இட்லி கடை திரைப்படம் உருவாகி வருகின்றதாம். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய் நடித்து வருகின்றார். அருண் விஜய் இப்படத்தில் நெகடிவான ரோலில் நடிப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் நாயகியாக நித்யா மேனனும், சப்போர்டிங் ரோலில் சத்யராஜ், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தில் பிரபல ஹீரோவான அசோக் செல்வன் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் அசோக் செல்வன் இப்படத்திலிருந்து விலகியதாக ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது. கடந்த வாரமே அசோக் செல்வன் தான் இட்லி கடை படத்தில் இல்லை என அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இட்லி கடை படத்தில் தனுஷ் மிகப்பெரிய மாற்றத்தை செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. அசோக் செல்வன் நடிப்பதாக இருந்த ரோலில் வேறொரு நடிகரை நடிக்க வைக்காமல் அந்த கதாபாத்திரத்தை தனுஷ் நடிப்பதாக செய்திகள் வருகின்றன. அந்த கதாபாத்திரத்தை நீக்கிவிட்டு கதையில் சில மாற்றங்களை செய்து இட்லி கடை படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் தனுஷ்.
இதைப்போல தான் மணிரத்னம் கமலை வைத்து இயக்கும் தக்லைப் திரைப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலகியதால் அந்த கதாபாத்திரங்களை கதையில் இருந்து நீக்கிவிட்டு சில மாற்றத்தை செய்து படப்பிடிப்பை நடத்தினார் மணிரத்னம். அதுபோல இட்லி கடை படத்தில் தனுஷ் செய்து வருவதாலே, மணிரத்னம் டெக்னீக்கை தனுஷ் பின்பற்றுகிறாரா ? என பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.