Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விளை நிலங்களில் மாசு ஏற்படுத்திய ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டம்!

04:44 PM Dec 21, 2023 IST | Web Editor
Advertisement

ஈரோடு அருகே விளை நிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் மாசு ஏற்படுத்தி
வரும் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மாசு
கட்டுப்பாட்டு வாரியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

ஈரோடு அடுத்துள்ள மூலக்கரை கிராமத்தில் பிரபல தனியார் ஆயில் தயாரிப்பு ஆலை
செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆயில்கள், உள்நாடு
மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேறும் கழிவுகளால், அப் பகுதியை சுற்றியுள்ள கூறப்பாளையம், கதிரம்பட்டி உள்ளிட்ட பல்வேறு
கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தடி நீர், கிணறு,
ஆழ்துளை கிணறு போன்றவைகளும் மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள் : ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் பயணிகளை பாதுகாத்த மேலாளர் ‘ஜவ்பர் அலி’ – ‘தன்னலமில்லா தலைமகன்’ விருது வழங்கி சிறப்பித்த நியூஸ் 7 தமிழ்!

தனியார் ஆலையின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆலைக்கு எந்தவித அனுமதியும் அளிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் ஈரோடு சென்னிமலை
சாலையில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு வந்த மூலக்கரை கிராமத்தை சேர்ந்த சுமார் 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது,

"ஆலையில் இருந்து வெளியேறும் புகையின் காரணமாக காற்று மாசுடைந்து வரும் நிலையில், பல்வேறு சுகாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த தனியார் ஆலைக்கு எவ்வித அனுமதியும் வழங்க கூடாது.

சம்பந்தப்பட்ட தனியார் ஆலையில் உரிய ஆய்வு மேற்கொண்டு, சுத்திகரிக்கப்படாமல் கழிவுகள் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்தி, சுத்தமான காற்று மற்றும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதோடு கேன்சர் ,உள்ளிட்ட சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் வருவதால் ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்"என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
agricultural landsDamageErodepollutionprivate plantProtestpublic
Advertisement
Next Article