உலகின் மிக இளவயது ஓவியர் - கானா சிறுவன் சாதனை!
உலகின் இளைய வயது ஓவியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கானாவைச் சேர்ந்த ஏஸ்-லியாம்.
கானாவைச் சேர்ந்த ஏஸ்-லியாம் நானா சாம் அன்க்ரா, கின்னஸ் உலக சாதனையில் உலகின் இளைய ஆண் ஓவியராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 1 வருடமும் 152 நாட்களும் ஆன வயதில், அவர் பல ஓவியங்களை வரைந்துள்ளார். அது மட்டுமல்லாமல், அவற்றில் 9 ஓவியங்கள் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
அவரின் தாயார் சான்டெல்லி இதுபற்றி கூறும்போது, ஓவியம் வரைவதில் அவருக்கு இருந்த ஆர்வம், அவர் ஆறு மாத குழந்தையாக இருந்தபோதே வெளிபட்டது என்று தெரிவித்தார். மேலும், அவர் கூறும் போது"அவர் நடக்க கற்றுக்கொண்டிருக்கும் போது, நான் என் வேலையில் பிஸியாக இருந்த நிலையில், அவரையும் பிஸியாக வைத்திருக்கும் விதமாக கேன்வாஸ் பேப்பரை தரையில் விரித்து அதில் சிறிது பெயிண்டை ஊற்றினேன்.
அவர் அந்த கேன்வாஸ் பேப்பர் முழுவதும் அந்த பெயிண்டை பூசினார். இவ்வாறு அவர் தனது முதல் ஓவியத்தை வரைந்தார்.
ஓவியம் அவருக்கு பிடித்த ஒன்றாக மாறிவிட்டது" என்றார். சமீபத்தில் ஏஸ்-லியாமின் கண்காட்சி நடத்தப்பட்டது. அவரது 10 ஓவியங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் 9 இந்த நிகழ்வின் போது விற்கப்பட்டன.