Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு: உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு!

03:35 PM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

2006 - 2011 காலகட்டத்தில் தமிழ்நாடு அமைச்சராக இருந்த பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை கீழமை நீதிமன்றம் விடுவித்தது. இதனைத் தொடர்ந்து,  அந்த சொத்து குவிப்பு வழக்கை தாமான முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என கடந்த ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 21-ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. 

இந்நிலையில் இந்த தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி மற்றும் அவரது மனைவி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். மேல்முறையீட்டு மனுவில், முன்பே சொத்து குறித்த முழு விவரங்களை தெரிவித்திருக்கும் நிலையில் அதனை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், மேல்முறையீடு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
appealDMKIllegal Money TransferjudgementNews7Tamilnews7TamilUpdatesponmudiSCSupreme court
Advertisement
Next Article