Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

08:43 AM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை செங்கல்பட்டு, சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, கோவை, நீலகிரி , ஈரோடு, தேனீ,  ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : “ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்” – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

மேலும், கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று ஆகஸ்ட் 13ம் தேதி  முதல் ஆகஸ்ட் 18 வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு அறிவித்துள்ளது.

Tags :
chengalpattuChennaiRainsKanchipuramnagaiRainRainAlertSalemTamilNaduThiruvannamalaiTiruvarurWeatherWeatherUpdate
Advertisement
Next Article