Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெயில் அதிகரித்து வரும் நேரத்தில் இன்று முதல் ஆவின் ஐஸ் க்ரீம் விலை உயர்வு - அதிர்ச்சியில் ஐஸ் க்ரீம் பிரியர்கள்!

07:08 AM Mar 03, 2024 IST | Web Editor
Advertisement

ஆவின் நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்கள் இன்று முதல் விலை உயர்த்தப்பட உள்ளதால் ஐஸ்கிரீம் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Advertisement

ஐஸ்க்ரீமை பிடிக்காத மனிதர்களே இல்லை, ஐஸ்கிரீமை பிடிக்காதவர்கள் மனிதர்களே இல்லை என ஐஸ்கிரீம் பிரியர்கள் ஒன்லைன் சொல்லும் அளவிற்கு மிகப் பிரதான் ஒன்றாக உலகம் முழுவதும் ஐஸ் க்ரீம் இருந்து வருகிறது.  அதிலும் குறிப்பாக குட்டீஸ்களுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளைப் பிரியம்.  தடுமனால் அவதிப்பட்டு மூக்கு ஒழிகினாலும் ஐஸ்கிரீம் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் எல்லோரது வீட்டிலும் உண்டு.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆவின் தயாரிப்பில் வெளியாகும் ஐஸ்கிரீம்களின் விலை இன்று முதல் உயர்கிறது. தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான ஆவின் பால் நிறுவனம் மூலம் நாள்தோறும் பல்வேறு விலைப்பட்டியலில் பால் பாக்கெட்டுக்கள் முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால்களில் இருந்து தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கீரிம்கள், பன்னீர் உள்ளிட்ட பால் பொருட்களையும் தமிழ்நாடு அரசு தயாரித்து விற்பனை செய்து வருகிறது.  இந்த நிலையில் ஆவினில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரிம்களின் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தியுள்ளது.

இதன்படி சாக்கோபார் (Chocobar), பால் வெண்ணிலா (Ball Vanilla) , கோன் வெண்ணிலா (Cone Venilla), கிளாசிக் கோன் சாக்லேட் (Classic Cone  Chocolate) உள்ளிட்ட ஐஸ்கீரிம்களின் விலையை ஆவின் நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இதேபோல 65 மில்லி கொண்ட சாக்கோபார் ரூ.20 இல் இருந்து ரூ.25 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று, 125 மில்லி அளவுள்ள பால் வெண்ணிலா ஐஸ்கிரீம், ரூ.2  அதிகரித்து ரூ.30 ஆக விற்பனை செய்யப்பட உள்ளது.

இதேபோல 100 மில்லி அளவு கொண்ட கோன் வெண்ணில்லா மற்றும் கிளாசிக் கோன் சாக்லேட் ஐஸ்கிரீம் ஆகியவை ரூ.30 இல் இருந்து ரூ.35 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த விலையுயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags :
aavinAavin Ice Creamice creamprice hike
Advertisement
Next Article