Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜம்மு - காஷ்மீரில் முதல்முறையாக வெற்றிக்கணக்கை தொடங்கிய #AAP!

04:54 PM Oct 08, 2024 IST | Web Editor
Advertisement

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில், தோடா சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்று, தனது கணக்கை தொடங்கியுள்ளது ஆம் ஆத்மி.

Advertisement

யூனியன் பிரதேசமான ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. செப்.18ஆம் தேதி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25-ம் தேதியும், மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் 1-ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.

இது ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பின் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஜம்மு- காஷ்மீர் தேர்தலில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியாகவும், பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) ஆகியவை தனித்தும் போட்டியிட்டன.

இதில் காங்கிரஸ்-தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. உமர் அப்துல்லா மீண்டும் முதலமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் தோடா தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக், பாஜகவின் கஜய் சிங் ராணாவை தோற்கடித்துள்ளார். பாஜக வேட்பாளர் கஜய் சிங் ராணாவை விட, 4538 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மலைக்கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வாக்கு கேட்டார்.

கெஜ்ரிவாலின் சொந்த மாநிலமான ஹரியானாவில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றாத ஆம் ஆத்மி, ஜம்மு - காஷ்மீரில் முதல் முறையாக ஒரு தொகுதியை கைப்பற்றியுள்ளது. இது மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
AAPassembly electionsDodaJammu and KashmirMehraj Malik
Advertisement
Next Article