Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அமீர் - ஞானவேல் ராஜா விவகாரம் | இயக்குநர்கள் சங்கத்திற்கு சசிகுமார் வேண்டுகோள்...

04:01 PM Nov 25, 2023 IST | Web Editor
Advertisement

ஞானவேல் ராஜா மற்றும் அமீர் ஆகியோரின் விவகாரம் தொடர்பாக  இயக்குநர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் சசிகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

இயக்குனர்கள் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். அதன் பின்னர் 2008ம் ஆண்டு "சுப்பிரமணியபுரம்" படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அந்தப் படத்திற்காக பிலிம்பேர் விருது,  உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்நிலையில் 2007ம் ஆண்டு வெளியான அமீரின் "பருத்திவீரன்" படத்தை தயாரித்த ஞானவேல் ராஜா அமீர் மீது சில குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார். அதற்கு இயக்குனர் அமீரும் விளக்கமளித்து நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே அமீருக்கு ஆதரவு தெரிவித்திருந்த சசிகுமார் ” அண்ணன் அமீர் குறித்த ஞானவேல் ராஜாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன் ‘பருத்திவீரன்” இறுதி கட்ட படப்பிடிப்பிற்கான முழு தொகையையும் அண்ணன் அமீருக்கு நானே கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணம் செட்டில் செய்யப்படாமலேயே படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அவர் சொல்வது உண்மை” என கூறியிருந்தார்.

 

அதனை தொடர்ந்து தற்போது, ” அண்ணன் அமீர் இயக்குனர்கள் சங்கத்தின் பொறுப்பிலிருக்கும்போது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தவர். அவரது பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையும் அவருக்கு உண்டு. இப்பொழுது அண்ணன் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வாரியிறைத்த வன்மமான வார்த்தைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை இயக்குனர்கள் சங்கம் தனது கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். மௌனமாக இருப்பதென்பது உண்மையை மறைத்து வைப்பதற்குச் சமம்” என கூறியுள்ளார்.

Advertisement
Next Article