இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவாறு ராக்கெட் வெடித்த இளைஞர்!... நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?...
இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவாறு ராக்கெட் வெடிகளை வெடித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதி வேகமாக செல்லும் விலை உயர்ந்த பைக்குகளில் சாகசம் செய்வதை வீடியோ எடுத்து
லைக்குகளுக்காக வாலிபர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். குறிப்பாக
இரவு நேரங்களில் இது போன்ற பைக் ரேஸ்கள் மற்றும் சாகச பயணங்களைக்
கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு
நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக சமூக வலைதளத்தில் பதிவுகளை
மேற்கொண்டு வைரலாகும்போது சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீதும் கைது நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீப காலமாக காவல்துறை நடவடிக்கையால் இரவு நேரங்களிலும் சாகச பயணங்கள் செய்வது குறைந்து வந்த நிலையில் தற்போது தீபாவளியை முன்னிட்டு இருசக்கர வாகனத்தில் வாலிபர்கள் ராக்கெட் போன்ற வெடிகளை ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டே வெடிக்கும் காட்சிகளை சமூக வலைத்தளத்தில் தற்போது பதிவிட ஆரம்பித்துள்ளனர்.
இரவு நேரங்களில் இதுபோன்ற ஆபத்தான முறையில் சாகசம் செய்து கொண்டே வெடிக்கும் வீடியோக்களை பதிவிட்டு லைக்குகளுக்காக செய்யும் செயல்களை சமூக வலைத்தளம் மூலமாக காவல்துறையில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்துவிட்டு இதுபோன்று வாலிபர்கள் தலைக்கவசம் மாட்டிக் கொண்டு செய்கின்றனர்.
இருப்பினும் மீண்டும் தலை தூக்கி உள்ள வாலிபர்களின் பைக் சாகச பயண வீடியோ
பதிவுகள் குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நடவடிக்கை
மேற்கொண்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பைக் சாகசத்தில் ஈடுபட்ட டிடி எப் வாசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததோடு மட்டுமின்றி அவரது லைசன்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.