போக்குவரத்து நெரிசலின் போது UPSC தேர்வுக்கு படித்த சொமேட்டோ ஊழியர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!
போக்குவரத்து நெரிசலில் தனக்கு கிடைத்த சில நிமிடத்தில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயராகும் சொமேட்டோ ஊழியரின் வீடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பட்டப்படிப்பை முடித்து பின்னர் இளைஞர்கள் அதிக வருமானத்துடன் கூடிய வேலை நோக்கி பெரும்பாலானவர்கள் செல்கின்றனர். குறிப்பாக, அரசு வேலையில் பணிப்புரிய அதிக அளவிலான இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்தியப் போட்டித் தேர்வுகளிலேயே மிகக் கடினமான தேர்வுகளில் ஒன்றாக யுபிஎஸ்சி தேர்வு பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் கடினமாக உழைப்பைச் செலுத்திப் படிப்பதால் மட்டுமை தேர்ச்சி அடைய முடிவும்.
இதையும் படியுங்கள் : உறுப்பு மாற்று சிகிச்சையில் சாதனை படைத்த தமிழ்நாடு – கடந்த 15 ஆண்டுகளில் 11,002 சிகிச்சைகள்!
இந்நிலையில், சொமேட்டா உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவர், சாலை போக்குவரத்து நெரிசலின் போது கிடைத்த இடைவெளியில் யுபிஎஸ்சி தேர்வுக்கான பாடம் பற்றிய வீடியோவை பாரத்துக்கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தன்னுடைய வாகனத்தின் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மொபைல் போன் ஸ்டாண்டில் அந்த இளைஞர் தனது மொபைல் போனை பொருத்தி இருந்தார். போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தன. இந்த இடைவெளியில், யுபிஎஸ்இ தேர்வுக்கான வகுப்புகளை தன் மொபைல் மூலம் அந்த இளைஞர் பார்க்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், அரசு போட்டி தேர்வுக்காக தனக்கு கிடைத்த சில நிமிடத்திலும் பாடம் குறித்த வகுப்புகளை பார்க்கும் இந்த இளைஞரின் வீடியோ ஊக்கம் தரும் வகையில் உள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து, சொமேட்டா உணவு டெலிவரி செய்யும் இளைஞரின் கடின உழைப்பைப் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.