ஆம்பூர் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
ஆம்பூர் அருகே தடுப்பணையில் நண்பர்களுடன் இணைந்து குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
06:43 PM Oct 14, 2025 IST
|
Web Editor
Advertisement
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்பி கொள்ளை பகுதியில் ஆணைமதகு தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் குளிப்பதற்காக அருகிலுள்ள பெத்லேகம் பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞர் நண்பர்களுடன் சென்றுள்ளார்.
Advertisement
அப்போது தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த அஜய் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் இளைஞரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர தேடுதலுக்கு பின் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Article