Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீலகிரியில் சிறுத்தை தாக்கி சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு!

03:35 PM Dec 29, 2023 IST | Web Editor
Advertisement

தேயிலை தோட்டத்தில் பணிக்கு சென்ற போது சிறுத்தை தாக்கியதால், கோவை அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரிதா என்ற பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

Advertisement

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்துலூரை அடுத்த ஏலமன்னா பகுதியில் கடந்த 22-ம் தேதி
காலை தேயிலை தோட்டத்திற்கு பணிக்கு சென்ற சரிதா,  சித்ரா, வள்ளி ஆகிய 3 பழங்குடியின பெண்களை தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை தாக்கியது. இந்நிலையில், படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : ’சுனாமிக்குப் பின் முதலில் வந்து ஆறுதல் கூறியவர் விஜயகாந்த்’ – மீனவ மக்கள் கண்ணீர் அஞ்சலி…

படுகாயமடைந்த சரிதாவை உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சரிதா சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்த பழங்குடியின பெண் சிகிச்சை உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதியில் மனிதர்களை தாக்கிய சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து
அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

Tags :
diedleopardNilgiriswoman
Advertisement
Next Article