ரூ.800 மட்டும் வைத்து ரூ.6,000-க்கு ஷாப்பிங் செய்த பெண்! டேட்டிங் கலாச்சாரம் குறித்து விவாதத்தை கிளப்பிய சமூக வலைதள பதிவு பதிவு!
ரூ.800 மட்டும் வைத்துக்கொண்டு ரூ.6,000-க்கு ஷாப்பிங் செய்த பெண்ணின் ஒப்புதல் கருத்து டேட்டிங் கலாச்சாரம் குறித்து விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
ஆண்களுக்கு விவாகரத்து வழக்குகளில் உதவும் தீபிகா பரத்வாஜ் நாராயணன் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவு டேட்டிங் விதிமுறைகள் பற்றிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இரண்டு வாட்ஸ்அப் சாட்டுகளின் ஸ்கீரின்ஸாட்டை பகிர்ந்துள்ளார். அதில், காபி டேட் செல்லும் ஒரு ஆணிற்கும், பெண்ணிற்கும் இடையேயான உரையாடல் இடம்பெற்றுள்ளது. ஆனால் இரண்டு ஸ்கிரீன்ஷாட்டிலும் அந்த பெண் ஆணிடம் பணம் கேட்கிறாள்.
முதல் ஸ்கிரின்ஷாட்டில், அந்த பையன் பெண்ணை காபி டேட்டிற்காக அழைக்கிறான். காபி டேட்டிற்கு வர வேண்டுமானால் ரூ.10 ஆயிரம் செலவாகும் என தனது ஒப்பனை செலவை அனைத்தையும் பட்டியலிட்டு தனது யுபிஐ ஐடியை அனுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த பையன் பணத்தை அனுப்பியதற்கு பின், இலவச டேட்டிங் எல்லாம் இந்த நாளில் சுவாரசியமாக இருப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது ஸ்கிரீன்ஷாட்டில், ஒரு பெண் ஆண் ஒருவரிடம் பணம் கேட்கிறாள். எனக்கு 5000 அல்லது 6000 ரூபாய் இருந்தால் அனுப்புங்கள். எனக்கு சம்பளம் போட்டவுடன் தருகிறேன், மாலில் அதிகமாக செலவாகிவிட்டது என கூறியுள்ளார். எதற்கு இவ்வளவு செலவு ஆனது என அந்த பையன் கேட்க சட்டைகளுக்கும், ஷூக்களும் செலவாகி விட்டது என தெரிவித்துள்ளார். அளவுக்கு மீறிய செலவு எதற்கு என கேட்பதற்கு எனக்கு சம்பளம் போடும் வரை அலுவலகத்திற்கு செல்ல இவை அனைத்தும் தேவை என தெரிவித்துள்ளார். ஆனால் 6 ஆயிரம் ரூபாய்க்கு ஷாப்பிங் செய்த பெண்ணிடம் வெறும் 800 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது.
இன்று காலை பகிரப்பட்ட இந்த பதிவு தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும் பல கருத்துகளையும் பெற்று வருகிறது. அதில் சில கருத்துகளை இங்கு காண்போம்.
- இதில் சோகம் என்னவென்றால் பல ஆண்கள் இந்த செலவுகளை சுமக்கத் தயாராக உள்ளனர்.
- வணிக ஒப்பந்தம் என்றே இவற்றை பார்க்க வேண்டும்.
- பெண்கள் தங்களின் சொந்த செலவிற்காக பல அப்பாவி ஆண்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
- இது டேட்டிங் இல்லை. பிச்சை
இவ்வாறு பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.