Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சீன உணவகத்தில் ரோபோ போன்று உணவு பரிமாறிய பெண்! - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

03:10 PM Jun 18, 2024 IST | Web Editor
Advertisement

சீன உணவகம் ஒன்றில் ரோபோ போன்று உணவு பரிமாறிய பெண்ணில் செயல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

Advertisement

ரோபோக்களின் சேவை பல துறைகளிலும் கால்பதித்து வருகிறது. உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரிய ஓட்டல்களில் ரூம் சர்வீஸ் செய்வதற்கும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது உணவகம் ஒன்றில் ரோபோ போன்று ஒரு பணிப்பெண் உணவு பரிமாறும் காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள பணிப்பெண் ரோபோவை போன்றே வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.

இதையும் படியுங்கள் : அழகான பெண்களுக்கு மட்டும் அனுமதி ‘No Aunties’ – தென்கொரிய ஜிம் விளம்பரத்தால் சர்ச்சை!

மேலும், பார்ப்பதற்கு உண்மையான ரோபோ பரிமாறுவது போன்று வாடிக்கையாளர்கள் கருதும் வகையில் அந்த பெண்ணின் அசைவுகள் அனைத்தும் துல்லியமாக ரோபோவை போலவே இருக்கிறது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடக பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
Chinese RestaurantcustomersHumanRobotServing FoodVideoViral
Advertisement
Next Article