காரை கவிழ்க்க முயன்ற யானை.... உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்...
நீலகிரி அருகே திடீரென மிரண்டு ஓடிய காட்டு யானை, எதிரே வந்த காரை கவிழ்க்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள முத்தங்கா சரணாலயத்தில் சுற்றுலாப் பயணிகள் சிலர் காரில் சென்றனர். அங்கு, யானையை பார்த்த சுற்றுலாப் பயணிகள் இருவர் காரில் இருந்து இறங்கிறனர். அப்போது, யானை அவர்கள் இருவரையும் துரத்தியது.
இதனால் சுற்றுலா பயணிகள் இருவரும் சாலையில் ஓடினர். அவர்களில் ஒருவர் கால் இடறி கீழே விழுந்த நிலையில், அவரை யானை தாக்கியது. இதில் காயமடைந்த நபர் வனத்துக்குள் சென்று தப்பினார். மற்றொருவர் காரில் ஏறி தப்பினர். பின்னர் சுற்றுலாப் பயணிகளின் காரையும் யானை துரத்தியது. சுற்றுலாப் பயணிகளை யானை துரத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையும் படியுங்கள்: பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் ராஜிநாமா!
இதனைத் தொடர்ந்து நீலகிரி அருகே மசினாகுடி-பந்திப்பூர் வன சாலையில் காட்டு யானை ஒன்று திடீரென மிரண்டு ஓடியது. பின்னர் எதிரே வந்த சுற்றுலா பயணிகளின் காரை தும்பிக்கையால் கவிழ்க்க முயன்ற நிலையில், திடீரென வன பகுதிக்குள் நுழைந்தாதால் சுற்றுலா பயணிகள் அதிர்ஷடவசமாக உயிர் தப்பினர்.