Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

களக்காடு மலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானை | விவசாயிகள் அச்சம்...!

07:04 AM Jan 29, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லை மாவட்டம் களக்காடு மலை அடிவாரத்தில் முகாமிட்டுள்ள யானை, விளைநிலங்களைச் சேதப்படுத்திவருவதால் அச் அடைந்துள்ளனர்.

Advertisement

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பர புரத்தில் பத்து, மேலகாடு
விளைநிலங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் வாழை, நெல் பயிரிட்டுள்ளனர். மேலும்
தென்னை, பனை மரங்களும் வளர்த்து வருகின்றனர். இப்பகுதியில் பன்றி,
கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில்
மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஒற்றை யானை
இப்பகுதியில் முகாமிட்டு தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றது.

பகலில் மலையடிவார புதர்களில் தஞ்சமடையும் யானை இரவில் விளைநிலங்களுக்குள் புகுந்து தென்னை, பனை, வாழை மரங்களை சாய்த்து அட்டகாசம் செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த 1 மாதத்தில் 20 பனை மரங்கள், 23 தென்னை மரங்கள், 15
வாழைகளை யானை சாய்த்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒற்றை யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகளின் உயிருக்கு அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. பகல் நேரங்களில் கூட விளைநிலங்களுக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், எங்கள் வாழ்வாதாரமே விவசாயத்தை நம்பி தான் உள்ளது. பயிர்களை வளர்க்க 24 மணி நேரமும் விளைநிலங்களிலேயே பாடுபட்டு வருகிறோம். ஆனால் பலன் தரும் வேளையில் வனவிலங்குகள் அட்டகாசத்தால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.

தற்போது ஒற்றை யானை அச்சுறுத்தி வருவதால் விவசாய பயிர்கள் நாசமாகி வருகின்றன” என்றனர். எனவே விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து, விவசாயிகளை அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்டவும், நாசமான வாழை, தென்னை, பனை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே ஒற்றை யானையின் புகை படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Next Article