Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பல ரசிகர்களை சிரிக்க வைத்த குரல் ஒன்று மறைந்தது - நடிகர் மதன் பாப் மறைவு!

பிரபல காமெடி நடிகரான மதன்பாப் சென்னையில் இன்று மாலை காலமானார்.
08:45 PM Aug 02, 2025 IST | Web Editor
பிரபல காமெடி நடிகரான மதன்பாப் சென்னையில் இன்று மாலை காலமானார்.
Advertisement

 

Advertisement

பிரபல காமெடி நடிகரான மதன்பாப் சென்னையில் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 71. சமீபகாலமாக புற்றுநோய் பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்தவர், இன்று மாலை 5 மணிக்கு மறைந்ததாக அவர் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சென்னையை சேர்ந்த மதன்பாபுவின் இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. இந்த பெயரில் பலர் இருக்க மதன் என்று அழைக்கப்பட்டார். தனது சகோதரர் பெயரை சேர்த்து மதன்பாபு என்ற இசைக்குழுவை ஆரம்பத்தில் நடந்தி வந்தார். அவர் கச்சேரியில் இளையராஜா, கங்கை அமரன் உட்பட பலர் பாடியிருக்கிறார்கள். இவரின்தான் ஏ.ஆர்.ரகுமான் கீ போர்டு கற்று இருக்கிறார். இதை அவரே பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

மதன்பாபுவின் சிரிப்பு வித்தியாசமானது. அவர் தனது திக்குவாய் குறையை மறைக்க இப்படி சிரித்ததாக அவருடைய நண்பர்கள் கூறுகிறார்கள். அதை பார்த்து வியந்த பாலசந்தர், தனது ஜாதிமல்லியில் அவரை நடிக்க வைத்து இருக்கிறார். அதற்குமுன்பே நீங்கள் கேட்டவை படத்தில் இடம் பெற்ற அடியே பாடலில் அவர் இசைக்கலைஞராக டான்ஸ் ஆடியிருக்கிறார்.

இதை தொடர்ந்து தேவர்மகன், ஆசை, திருடாதிருடி, காதலா காதலா, நம்மவர், சிங்கம் 2 உட்பட பல படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 200க்கும் அதிகமான படங்களில் நடித்து இருக்கிறார். சினிமா தவிர, நாடகம், டிவிசீரியல், விளம்பரங்களிலும் நடித்து இருக்கிறார்.

குறிப்பாக, பிரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் இவர் காமெடி இன்றும் பிரபலம். சினிமாவில் நடித்துக்கொண்டே கார்மெட்ஸ் பிஸினஸ், இசைக்கச்சேரிகளையும் செய்து வந்தார்.பிரபல தனியார் சேனலில் பல ஆண்டுகளாக காமெடி ஷோ நடத்தி வந்தார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும், அர்சித், ஜனனி என்ற மகளும் உள்ளனர். ஜனனி பாடகியாக இருக்கிறார். நாளை மதன்பாப் இறுதிசடங்கு நடக்கிறது

Tags :
ComedianMadanBabuMadanPopRIPMadanPopTamilActorTamilCinema
Advertisement
Next Article