Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெய் கேன்களில் முஸ்லிம் இளைஞர்கள் துப்பாக்கி கடத்தியதாக பரவும் வீடியோ - உண்மை என்ன?

07:26 AM Dec 18, 2024 IST | Web Editor
Advertisement

This news Fact Checked by Newsmeter

Advertisement

நெய் கேன்களில் இருந்து கைத்துப்பாக்கியை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இந்துக்களை தாக்க முஸ்லிம்கள் என்ன வகையான ஆயுதங்களை கொண்டு வருகிறார்கள் என்று பாருங்கள் என பரவியது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்.

நெய் கேன்களில் இருந்து கைத்துப்பாக்கியை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெய் கேன்களில் கைத்துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த முஸ்லிம் இளைஞர்களை போலீசார் பிடித்து விட்டதாக அந்த பதிவு பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்தக் காணொளியைப் பகிர்ந்த முகநூல் பயனர் ஒருவர், "இந்த அமைதிக்கான தூதுவர்கள் இந்துக்களை தாக்குவதற்கு என்ன ஆயுதங்களைக் கொண்டு வருகிறார்கள் என்று பாருங்கள், சரியான நேரத்தில் காவல்துறை அவர்களைப் பிடித்தார்கள். இல்லையென்றால்… அவ்வளவுதான்” என்கிற தொனியில் அந்த பதிவு பகிரப்பட்டது

உண்மைச் சரிபார்ப்பு:

சமூக வலைதளங்களில் வைரலான இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை நியூஸ் மீட்டர் சரிபார்த்தபோது இந்த வீடியோ தவறான கூற்றுடன் வைரலாகி வருவது தெரியவந்தது. எங்கள் விசாரணையில் வைரலான வீடியோ 2019 பகிரப்பட்டது மற்றும் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் அல்ல அவர்கள் இந்துக்கள் என்று கண்டறிந்தோம்.

வைரலான பதிவின் உண்மையை அறிய, முதலில் இந்த வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்களை எடுத்து அவற்றை ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு கூகுளில் சரிபார்த்தோம். இந்த வீடியோவை 27 செப்டம்பர் 2019 அன்று டெல்லி டக்கின் யூடியூப் சேனலில் பதிவேற்றியதைக் கண்டோம். டெல்லியில் நெய் கேன்களில் கைத்துப்பாக்கிகள் கடத்தல் என்று வீடியோவுடன் கூடிய தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. மேலும் கைது செய்யப்பட்ட இருவரின் பெயர்கள் ஜிதேந்திர ஜீது மற்றும் ராஜ் பகதூர் என வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய வார்த்தை தேடலில், 26 செப்டம்பர் 2019 அன்று NDTV இல் வெளியான செய்தியில் வைரலான வீடியோவின் ஸ்கிரீன்ஷாட்டைக் கண்டோம் அந்த அறிக்கையில், டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழு, நெய் கேன்களில் மறைத்து வைத்திருந்த 26 கைத்துப்பாக்கிகளுடன் காஜிபூர் பகுதியில் இருவரை கைது செய்தது என குறிப்பிட்டிருந்தது. டெல்லியின் காஜிபூர் பகுதிக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத ஆயுதங்கள் சப்ளையர் ஒருவர் வருவதாக அவரது குழுவினருக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் மஹிந்திரா பொலேரா காரை நிறுத்தி காரில் பயணம் செய்த ஜிதேந்திரா, ராஜா பகதூர் ஆகிய இருவரையும் கைது செய்து காருக்குள் இருந்து 2 நெய் கேன்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவரும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிந்த் பகுதியைச் சேர்ந்தவர்கள்" என்று சிறப்புப் படை டிசிபி பிரமோத் குஷ்வாஹா கூறினார்.

மேலும் இந்த வழக்கில் பல அறிக்கைகளை நாங்கள் கண்டோம். அவை அனைத்து செய்திகளிலும் பிடிபட்டவர்களின் பெயர்கள் ஜிதேந்திர ஜீது மற்றும் ராஜ் பகதூர் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தவகையில், நெய் கேன்களில் கைத்துப்பாக்கிகள் சிக்கிய வழக்கு 2019ஆம் ஆண்டு பதிவானது. அதேபோல இந்த வழக்கில் கைதான இருவரும் இந்துக்கள் என்றும், முஸ்லிம்கள் அல்ல என்றும் எங்களது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முடிவு :

நெய் கேன்களில் இருந்து கைத்துப்பாக்கியை எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி இந்துக்களை தாக்க முஸ்லிம்கள் என்ன வகையான ஆயுதங்களை கொண்டு வருகிறார்கள் என்று பாருங்கள் என பரவியது. இதனை ஆய்வு செய்தபோது வைரல் வீடியோவில் இடம்பெற்ற சம்பவம் 2019 நடைபெற்றது என்றும் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டது முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் இந்துக்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Note : This story was originally published by Newsmeter and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Ghee caneMuslimssmuggling gunsviral video
Advertisement
Next Article