Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலை’ என வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

10:24 PM Feb 02, 2025 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by ‘Telugu Post

Advertisement

லாவோஸ் நாட்டில் வசிக்கும் பெரும்பான்மையானவர்கள் புத்த மதத்தை சேர்ந்தவர்கள் ஆவார். அந்நாட்டு மக்கள்தொகையில் சுமார் 65 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் புத்த மதத்தினை பின்பற்றுகிறார்கள். அவர்களில் பெரும்பாலனாவர்கள் தேரவாத புத்தமதத்தை பின்பற்றுகின்றனர். இது புத்தமதத்தின் பிரதான கிளைகளில் ஒன்று என கூறப்படுகிறது.

ஒரு பழமையான கதையின் படி, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசிற்கு, புத்தமதத்துடன் உள்ள தொடர்பு கி.மு.மூன்றாம் நூற்றாண்டில் அசோக மன்னர் காலத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்திய கலாச்சாரத்தின் தாக்கம் லாவோசின் கலை மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாகவே இருந்துள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக, இந்து மற்றும் புத்தமத சின்னங்கள் (iconography) இந்த நாட்டின் கலை வடிவங்களில் பிரதிபலிக்கப்படுகின்றன.

கடந்த 2024ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் லாவோஸ் நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, புத்தர் சிலை ஒன்றினை லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபான்டோனே-க்கு பரிசாக வழங்கினார். அதே சந்திப்பில் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட பழமையான பித்தளையினால் செய்யப்பட்ட புத்தர் சிலையினையும், லாவோசின் அதிபர் தோங்லுன் சிசௌலித்-க்கு பிரதமர் மோடி வழங்கினார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் தமிழ்நாட்டின் ஒரு நதியின் அருகே அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அழகான புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவை பகிர்ந்த Facebook பயனர், “खुद का खुद से” என்ற பெயரில், “जहां खोदोगे बुद्ध ही निकलेंगे क्योंकि ये बुद्ध की धरती है अवतारों की नहीं।” என்று எழுதியுள்ளார். இதை தமிழில் மொழிப் பெயர்த்தால், “நீங்கள் எங்கு தோண்டினாலும், புத்தரின் சிலை தான் கிடைக்கும், ஏனெனில் இது புத்தரின் நிலம்; அவதாரங்களின் நிலம் அல்ல” எனப் பொருள்படுகிறது.

பதிவின் இணைப்பு மற்றும் பகிரப்பட்ட புகைப்படம்;

உண்மை சரிபார்ப்பு; 

இந்த பதிவை சோதனை செய்ததில், தமிழ்நாட்டில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்தது.

இந்த காணொளியின் முக்கிய காட்சிகளை InVid tool மூலம் பிரித்தெடுத்து, புகைப்படமாக எடுத்து Google Reverse Image Search மூலம் தேடியதில் ஒரு முகநூல் பதிவு கண்டுபிடிக்கப்பட்டது. அதில், புத்தர் சிலை தாய்லாந்து-லாவோ1 எல்லை அருகிலுள்ள மேகாங் நதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இது Mueang Ton Phueng என்ற இடத்தில், Chiang Rai மாநிலத்தில் உள்ள Chiang Saen மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.

இதன் அடிப்படையில், YouTube-ல் தேடியதில் லாவோசின் ஒரு நதியில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்தர் சிலையைப் பற்றிய தகவல் அடங்கிய மேலும் சில வீடியோக்கள் கிடைத்தன. LNTV English சேனலில் 2024 ஆம் ஆண்டு ,மே 19 அன்று வெளியிடப்பட்ட காணொளியில், “குறைந்தது இரண்டு மீட்டர் உயரமுள்ள புத்தர் சிலை Bokeo மாவட்டத்தில் உள்ள Tonpheung பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பகுதியின் பண்டைய கலைப்பொருட்கள் தேடுதலின் போது கிடைத்ததில் இச்சிலையே மிகப்பெரிய கண்டுபிடிப்பு” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மை என்ன?
மேலும், Laotian Times நாளிதழில் வெளியான செய்தியில், “புத்தர் சிலையின் கண்டுபிடிப்பு மேகாங் நதிக்கரையிலுள்ள நாடுகளில், குறிப்பாக லாவோஸ், தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. இது போகியோ(Bokeo) மாவட்டத்திலுள்ள Tonpheung பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதன் உண்மைத்தன்மை மற்றும் சொந்த உரிமைக்கான விவாதங்கள் பரவி வருவதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது.

முடிவு;

தமிழ்நாட்டில் லாவோஸ் என்ற பெயருள்ள எந்த நதியோ அல்லது இடமோ இல்லை. தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் புத்தர் சிலை லாவோஸ் நாட்டின் Bokeo மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Note : This story was originally published by ‘Telugu Post’ and Republished by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Buddha StatueFact CheckLaosShakti Collective2024
Advertisement
Next Article