”எல்லை தொடர்பான விவகாரத்தில் ஒரு உண்மையான இந்தியன் இப்படி பேச மாட்டார்”- ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி!
கடந்த 2022 டிசம்பரில் அருணாச்சல பிரதேசத்தில் இந்திய மற்றும் சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தருப்பு வீரர்களும் காயமடைந்தனர். அப்போது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ராணுவம் சீன ராணுவத்தால் தாக்கப்பட்டது என கருத்து தெரிவித்தார். இதனையடுத்து இந்திய ராணுவத்தின் மீது அவதூறு கருத்து தெரிவித்ததாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது இன்று உச்ச நீதமன்றத்தில் நீதிபதி திபான்கர் தத்தா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி தரப்பானது, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிற ஒருவர் இந்தியா எல்லைக்குள்ளான ஆக்கிரமிப்பு குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என எப்படி கூற முடியும்..? என்று வாதிட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ”ராகுல் காந்தி தனது கருத்தை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை மாறாக ஏன் அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார் ?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் அவர்கள், “சீனா, இந்திய எல்லையில் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பை ஆக்கிரமிப்பு செய்தது என்பது ராகுல் காந்தி விக்கி எப்படி தெரியும். எந்த உறுதியான தகவல் அடிப்படையில் அவர் அவ்வாறு தெரிவித்தார். எல்லை தொடர்பான விவகாரத்தை ஒரு உண்மையான இந்தியன் எடுத்தோம் கவிழ்த்தோம் என பேச மாட்டார். பேச்சு சுதந்திரம் என்பதற்காக எல்லாவற்றையும் தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பேச முடியாது என்று கடும் அதிருப்தி தெரிவித்தனர்
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்