Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

லண்டன் கிங்ஸ் பல்கலை.யில் திராவிட அரசியல் குறித்த ஆய்வுக்காக முதுகலை முனைவர் பட்டம் பெற்ற தமிழர்!

12:52 PM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement

லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் விக்னேஷ் கார்த்திக் எனும் தமிழர் திராவிட அரசியல் குறித்த ஆய்வுக்காக முதுகலை முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

Advertisement

விக்னேஷ் கார்த்திக் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்.  இவர் லண்டன் கிங்ஸ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இதற்காக இவர் எடுத்துக் கொண்ட தலைப்பு “ பெரியார் மற்றும் அண்ணா இடையே சமூக நீதி இயக்கம் எப்படி  கட்சி அரசியலாக மாற்றம் பெற்றது என்பது குறித்தும் திராவிட சிந்தாத்தத்தின் அடித்தளத்தில் திமுக ” என்பதாகும்.

இவர் லைடனில் உள்ள தென்கிழக்கு ஆசியாவுக்கான ராயல் நெதர்லாந்து இன்ஸ்டிடியூட்டில் இந்திய மற்றும் இந்தோனேசிய அரசியல் குறித்து முதுகலை ஆய்வாளராக இருந்தார்.

மேலும்  அரசியல் அறிவியல் மற்றும் பொதுக் கொள்கையில் முனைவர் பட்டமும்,  லண்டன் கிங்ஸ் கல்லூரியில் உள்ள கிங்ஸ் இந்தியா நிறுவனத்தில் நவீன இந்தியாவில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.  அரசியல் அறிவியல்,  பொதுக் கொள்கை,  சமூகவியல் மற்றும் வணிக ஆய்வுகள் என அவரது கல்வித் தேடல்களை பெற்றவர்.  பொதுக் கொள்கை, சட்டமன்ற ஆராய்ச்சி மற்றும் அரசியல் ஆலோசனை ஆகியவற்றில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.

விக்னேஷ் தனது கல்வி சார்ந்த அரசியல் அறிவின் மூலம் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு  2015 முதல் 2018 வரையிலான பல மாநில  தேர்தல்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  இதேபோல 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, கட்சியின் அறிக்கை போன்றவற்றில் அவர் பங்களித்துள்ளார்.

இதேபோல மூன்று மாநிலங்களில் 2021 மற்றும் 2022 மாநிலத்  தேர்தல்களில் இரண்டு முக்கிய  பிராந்தியக் கட்சிகளான திமுக மற்றும்  திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் உத்திகள் மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை வகுத்ததில் முக்கிய பங்காற்றினார்.

அதேபோல லண்டன் கிங்ஸ் பல்கலை.யில்  ''Social Media Networks and (Dis)information'' ஆராய்ச்சி  குழு தலைவர்களில் விக்னேஷும் ஒருவர்.  அதே போல கிங்ஸ் இந்தியா இன்ஸ்டிட்யூட்டின்  கருத்தரங்கு மற்றும் பாட்காஸ்ட் தொடரான 'சாதியை எதிர்கொள்வது' என்பதின் ஒருங்கிணைப்பாளராக அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
London Kings CollegePhDTamilianvignesh
Advertisement
Next Article