Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்து | ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம்!...

07:15 AM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

நள்ளிரவில் பர்னிச்சர் கடையில் திடீர் தீ விபத்தால் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் சேதம் அடைந்தது.

Advertisement

ஈரோடு பெரிய வலசு கொங்கு நகர் 3வது வீதியில் பர்னிச்சர் கடை நடத்தி வருபவர்
பொன்னுசாமி. இவர் அதே பகுதியில் கடந்த பல வருடங்களாக வீடு மற்றும் கடைகளுக்குத்
தேவையான பர்னிச்சர் பொருள்களைத் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் சுமார் 5க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் பொன்னுசாமி நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வழக்கம் போல்
கடையைப் பூட்டி சென்று உள்ளார். இந்த நிலையில் இவரது கடையிலிருந்து தீ பரவி
வருவதாக அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை
அணைத்தனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்குள் கடையிலிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள மர பொருள்கள் மற்றும் எந்திரங்கள் முற்றிலும் சேதம் அடைந்தன.
மின் கசிவு காரணமாக தீ விபத்தா அல்லது வேறு ஏதாவது காரணமா என்
வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
Damagefirefurniser
Advertisement
Next Article