Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திடீரென வெடித்த கண்ணிவெடி - விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!

07:01 AM Feb 14, 2024 IST | Jeni
Advertisement

ஏமன் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் திடீரென வெடித்த கண்ணிவெடியால் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

ஏமன் நாட்டில் கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி நாடுகள், ஏமன் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஏமன் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள லாஜ் மாகாணத்தில் புலம்பெயர்ந்த அகதிகளுக்கான முகாம்கள் பல உள்ளன. இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கண்ணிவெடி ஒன்று திடீரென வெடித்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

கூடாரங்களுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை குழந்தைகள் தெரியாமல் மிதித்ததால் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : இமாச்சலப் பிரதேசத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்த வெற்றி துரைசாமியின் உடல் தகனம்!

சவுதி அரேபியா தலைமையில் ‘மசாம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு, பல்வேறு மாகாணங்களில் கிளர்ச்சியாளர்கள் வைத்த சுமார் 4 லட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 3 முதல் 9-ம் தேதி வரை 784 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

Tags :
campchildrenRefugeesyemen
Advertisement
Next Article