கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட வேண்டுமென வலுக்கும் கோரிக்கை!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரமாண்டமாக திறக்கப்பட்ட போதும், சென்னை நகருக்குள் வசிக்கும் மக்கள் நலன் கருதி கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பட அரசு ஆவணம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது.நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமாக கட்டமைக்கப்பட்டுள்ள இங்கு, 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள், முழு குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2,285 வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி, 500 தனியார் பேருந்து நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகளும் இந்த பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்னை பண்டிகை காலங்களில் மேலும் தீவிரமடையும் என தெரிவிக்கும் மக்கள், கிளாம்பாக்கத்தில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக திறக்கப்பட்டுள்ள பேருந்து முனையம் தேவைப்படுவோர் மட்டும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் எனவும், அதே நேரத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் வழக்கம் போலவே செயல்பட அரசு ஆவண செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.