Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Ramanathapuram | ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா - 101 கிடாய்கள் வெட்டி கறிவிருந்து | பின்னணி என்ன தெரியுமா?

01:10 PM Oct 06, 2024 IST | Web Editor
Advertisement

கமுதி அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழாவில் 101 கிடாய் ஆடுகள் வெட்டி படையிடலப்பட்டது.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமம் உள்ளது. இங்கு கண்மாய் கரையில்
பெண் தெய்வமான எல்லைப் பிடாரியம்மன் பீடம் அமைந்துள்ளது. இங்கு ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத திருவிழா 3 தலைமுறைகளாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் நடைபெற்று வருகிறது.

இத்திருவிழா நடக்கும் தேதி அறிவிக்கப்பட்டால், பீடம் அமைக்கப்படும் பகுதிக்கு திருவிழா முடியும் வரை பெண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வகையில் இந்தாண்டு திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. ஆண்கள் ஒன்று கூடி மண்ணால் பீடம் அமைத்து எல்லைப்பிடாரி அம்மன் உருவம் செய்தனர். பிடாரி அம்மனுக்கு மாலை அணுவித்து, பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் 101 கிடாய் ஆடுகளை பலியிட்டு, அதன் தலைகளை பீடத்திற்கு முன்பு வைத்து, பச்சரிசி சாதத்தை உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு படைத்தனர்.

பின்னர் திருவிழாவிற்கு வருகை தந்த ஆண்கள் அனைவருக்கும், பச்சரிசி சாத உருண்டை
மற்றும் கறி விருந்து பரிமாறப்பட்டது. இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால், மீதமிருந்த சாப்பாடு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தையும் அங்கேயே குழி தோண்டி புதைத்து விட்டு சென்றனர். ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் இவ்விழாவில், கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள்
பங்கேற்றனர்.

பழங்காலத்தில் ஐந்து ஆண்களோடு பிறந்த பெண் ஒருவர், தனது அண்ணியார்களால் துன்புறுத்தப்பட்டு வீட்டிலிருந்து வெளியேறி இந்த இடத்தின் அருகே வந்தவுடன் மாயமானார். பின்னர் முதல்நாடு கிராம மக்களின் கனவில் அந்த பெண் வந்து, நான் இந்த இடத்தில் தெய்வமாக இருந்து காப்பாற்றுவேன் எனவும், என்னை ஆண்கள் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை ஆடுகளை பலியிட்டு வழிபடவேண்டும் என்றும், பெண்கள் அப்போது அப்பகுதிக்கு வரக்கூடாது எனவும் கூறியதால் ஆண்டுதோறும் இந்த திருவிழா நடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Tags :
BakthidevoteesfestivalMen FestivalRamanathapuram
Advertisement
Next Article