Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜெர்மனியின் முனிச் நகரில் தொடர்ந்து வீசிவரும் பனிப்புயல்! ரயில்கள் மற்றும் அனைத்து விமானங்களும் ரத்து!

08:09 PM Dec 02, 2023 IST | Web Editor
Advertisement

ஜெர்மனியின் முனிச் நகரில் தொடர்ந்து வீசிவரும் பனிப்புயல் காரணமாக, இன்று (டிச.2) அனைத்து விமானங்களும், தொலைதூர ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement

தெற்கு ஜெர்மனியின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்புயல் வீசி வருவதால் முனிச் விமான நிலையத்தில் நாளை(டிச.3) காலை 6 மணி வரை விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலைகளில் பனி தேங்கியுள்ளதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலை விபத்துக்களும் நிகழ்ந்துள்ளன. முனிச் மற்றும் உல்ம் நகரங்களில் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் தேங்கியுள்ள பனியால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், தொலைதூரம் செல்லும் பயணிகள் நேற்றிரவு முழுவதும் ரயிலிலேயே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர்.

ஜெர்மனி மட்டுமன்றி அதன் அண்டை நாடுகளான ஆஸ்திரியா மற்றும் சுவிட்சர்லாந்திலும் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, அங்கு பனிச்சரிவு ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேற்கு ஆஸ்திரியாவில் நேற்று ஒரே இரவில், 50 செ.மீ அளவுக்கு(20 இன்ச்) பனி பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலையால் சுவிட்சர்லாந்தின் சுரிச் நகரிலும் விமான சேவை முடங்கியுள்ளது.

Advertisement
Next Article