#Chinaவில் திடீரென வெடித்த கழிவுநீர் குழாய்... 33 அடி உயரத்திற்கு பறந்த கழிவுகள்!
சீனாவில் கழிவுநீர் குழாய் திடீரென வெடித்ததில், 33 அடி உயரத்திற்கு பறந்த கழிவுகள் சாலையில் சென்ற வாகனங்களை அசுத்தப்படுத்தின.
கடந்த செப்.24ஆம் தேதியன்று தெற்கு சீனாவின் நான்னிங் நகரில், கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பொறியாளர்கள் அழுத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செப்டிக் டேங்க் குழாய் திடீரென வெடித்துள்ளது. குழாய் வெடித்ததில் 33 அடி உயரத்திற்கு எழுந்த கழிவுகள் தூக்கி வீசப்பட்டு, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது படிந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த கழிவு சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகளை முழுவதுமாக நனைத்தது. அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் மனித கழிவுகளில் நனையாமல் தப்பினர். ஆனால் வேகமாக கழிவுகள் வந்து அடித்ததில் காரின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இதனையடுத்து இதனை சரிசெய்யும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.