தொடர் விடுமுறை - சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களால் நிரம்பி வழியும் குற்றாலம்!
தொடர் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகையால் குற்றாலம் நிரம்பி வழிகிறது.
கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே, குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
இதையும் படியுங்கள்: சீனாவில் நிலநடுக்கம் – உயிரிழப்பின் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு!
தொடர்ந்து 5 நாட்களுக்குப் பிறகு மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் தொடர் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகளவு காணப்படுகிறது.