Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“ஏ.ஆர். ரகுமான் எனக்கு தந்தையை போன்றவர்” - இசைக்கலைஞர் மோகினி டே விளக்கம்!

09:46 AM Nov 26, 2024 IST | Web Editor
Advertisement

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தனக்கு தந்தை போன்றவர் என வதந்திகளுக்குள்ளான இசைக்கலைஞர் மோகினி டே தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியை பிரிவதாக கடந்த வாரம் அறிவித்தார். அவரது மனைவி சாய்ரா பானுவும் தங்களின் 29 வருடகால திருமண உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்தார். இச்செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து ஏ.ஆர். ரகுமானின் கிட்டாரிஸ்ட் ஒருவரும் தனது கணவரிடமிருந்து பிரிவதாக அறிவித்தார். இதனையடுத்து இந்த இரு பிரிவுகளையும் தொடர்புபடுத்தி, இணையத்தில் பலர் வதந்திகளை பரப்பினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்,

“என் அப்பா ஒரு லெஜண்ட். தன் படைப்புகளால் மட்டுமல்ல… பண்பு, அன்பு, மரியாதை என அனைத்தினாலும் ஒரு லெஜண்ட்டாக இருக்கிறார். அவரைப்பற்றி இப்படி அடிப்படை ஆதாரமற்ற, தவறான தகவல்கள் பரவுவது வேதனையளிக்கிறது. இன்னொருவர் வாழ்க்கையை பற்றி பேசுகையில், அதில் உண்மையும் மரியாதையும் இருக்கவேண்டும் என்பதை நாம் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். தவறான தகவல்களை பரப்புவதை தயவுசெய்து ஊக்குவிக்காதீர்கள்” என ஏஆர். ரகுமானின் மகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனிடையே தனக்கு எதிரான தவறான செய்திகளை உடனடியாக நீக்குமாறு யூடியூபர்களுக்கு ஏ.ஆர். ரகுமான் தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இதனை தொடர்ந்து. உலகிலேயே சிறந்த மனிதர் ஏ.ஆர்.ரகுமான் என்றும், அவர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும், தனது உடல்நிலை காரணமாகவே இருவரும் பிரிந்ததாக சாய்ரா பானு ஆடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் தனக்கு தந்தை போன்றவர் என இசைக்கலைஞர் மோகினி டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,

“எனக்கு பல ரோல் மாடல்கள் உள்ளனர். எனது வளர்ச்சியில் அவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் எனக்கு தந்தையைப் போன்றவர். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவரது மகளுக்கு எனது வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். என் மீதும் ஏ.ஆர்.ரகுமான் அன்பும், மரியாதையும் வைத்துள்ளார். அவரது இசைக்குழுவில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறேன். என்னையும் அவரையும் இணைத்து வதந்திகள் வந்துள்ளன. அவை உண்மை கிடையாது. இந்த வதந்திகள் காயப்படுத்துகின்றன. எனவே கனிவாக நடந்து கொள்ளுங்கள்” என்று வீடியோவில் மோகினி டே தெரிவித்துள்ளார்.

Tags :
ar rahmanMohini DeyMusic Composersaira banusinger
Advertisement
Next Article