பிரதமர் மோடிக்கு தினந்தோறும் கடிதம் எழுதும் கர்ப்பிணி!
கோவை மாவட்டத்தை சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை அதிகார வட்டத்துக்கு தெரிய படுத்த, பிரதமருக்கு தினந்தோறும் கடிதம் எழுதிகிறார்.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து அவ்வப்போது கடிதம் எழுதுவதும், மனு அனுப்புவதும் அரசியல் கட்சிகள் இயக்கங்களின் அன்றாட செயல்பாடுகளில் ஒன்று. அப்படிப்பட்ட ஒன்றை நாள்தோறும் தோய்வின்றி செய்து வருகின்றார் கோவையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர்.
கோவை மாவட்டம் , காந்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்நாடு அரசு ஊழியரான பழனிசாமி. இவரது மனைவி கிருத்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருக்கின்றார். இல்லத்தரசியான இவர், நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருக்கின்றார்.
அதற்காக கடந்த மார்ச் மாதம் 8 தேதி மகளிர் தினத்தன்று, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதி இருக்கின்றார். அக்கடித்தத்தில் பொதுமக்களின் அன்றாட பிரச்னைகளை பட்டியலிட்டு வைத்த கர்ப்பிணி கிருத்திகா, முதல் நாள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டி மனு அனுப்பினார். இரண்டாவதாக பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குதல் கோரி மனு எழுதியிருந்தார்.
முறையை அமல்படுத்துவது என ஆரம்பித்து இஸ்ரேல் - காசா போர் வரை கிருத்திகா
மனுவாக எழுதினார். இதுவரை 263 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதங்களை எழுதி அனுப்பி இருக்கின்றார். சட்ட நாளான நேற்று (நவ.26) 264 வது கடிதத்தை எழுதினார். இதில் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் அடிப்படை கடமைகளை தெரியப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி கோரிக்கை மனுவை கடிதமாக எழுதி, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி இருக்கிறார்.
அரசியல் கட்சி அமைப்புகள் தெரிவிக்கும் அதே கோரிக்கையை தான் தெரிவித்து
வந்தாலும், அக்கோரிக்கைகள் நிறைவேறும் பொழுது அதில் தனக்கும் ஒரு பங்கு
இருப்பதாக நினைத்து கிருத்திகா மன நிறைவடைகின்றார். பெரியார், அம்பேத்கர்,
மார்க்ஸ் போன்ற தலைவர்களின் சித்தாந்தங்களை படித்து அறிந்திருப்பதாகவும்,
பொதுமக்களின் நலன் சார்ந்து நாள்தோறும் இந்த கடிதம் எழுதும் பணியை தொடர
இருப்பதாகவும், கிருத்திகா பழனிசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றார்.