Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.0 என பதிவு!

04:35 PM Jan 09, 2024 IST | Web Editor
Advertisement

ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் பெரும் சேதத்தில் இருந்து, இன்னும் பல பகுதிகள் மீள முடியாத நிலையில், மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

ஜப்பான் நாட்டின் வடமேற்கு கடற்கரையில் புத்தாண்டு அன்று 7.6 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  90 நிமிடங்களில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டன. ஹொகைடோ தீவுகள் முதல் நாகசாகி வரை நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. இதனால், அந்த பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 1 முதல் 3 மீட்டர் உயரம் வரை, சில இடங்களில் 5 மீட்டர் உயரத்திற்கு கூட அலைகள் எழும் என எச்சரிக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் சாலைகளில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. டோயாமா மற்றும் கனாசாவா நகரங்களுக்கு இடையிலான பிரதான நெடுஞ்சாலையானது பல நூறு மீட்டர் தூரத்திற்கு நிலச்சரிவால் அழிந்தது. வீடுகள், கட்டடங்கள் என அனைத்து சேதம் அடைந்தன. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 240க்கும் மேற்பட்டோர் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

பெரும் சேதம் காரணமாக இன்னும் பல பகுதிகள் மீள முடியாத நிலையில், மீண்டும் இன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியான ஹோன்சு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகி உள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.

ஆனால் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதா என்ற எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
disasterearth quakeJapanNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article