Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விஜய்யை ஓவர்டேக் செய்த உத்தரகாண்ட் காவல்துறை; வைரலாகும் வீடியோ!

11:56 AM May 23, 2024 IST | Web Editor
Advertisement

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நர்சிங் அதிகாரி ஒருவரை கைது செய்ய  மருத்துவமனையின் 4-வது தளத்திற்குள் ஜீப்பில் புகுந்த காவல்துறையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement

நடிகர் விஜய்யின் ‘நண்பன்’ படத்தில் மருத்துவமனை காட்சி ஒன்று அமைந்திருக்கும். அதில் உடல்நலக்குறைவாக இருக்கும் ஜீவாவின் தந்தையை விஜய் ஸ்கூட்டியில் உட்கார வைத்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்வார்.  தற்போது விஜய்யின் இந்த சீனை ஓவர்டேக் செய்துள்ளனர் உத்தரகாண்ட் போலீசார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/SachinGuptaUP/status/1793344310273839238

ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நர்சிங் அதிகாரி சதீஷ்குமார் என்பவர் அதே மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவருக்கு தவறான வீடியோக்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  இந்த பாலியல் வழக்கு தொடர்பாக சதீஷை கைது செய்வதற்காக நான்காவது தளத்திற்கு ஜீப்பில் சென்றுள்ளனர் உத்தரகாண்ட் போலீஸ்.  அவசர சிகிச்சை பிரிவுக்குள் ஜீப்பில் புகுந்த இவர்கள் வேகவேகமாக சென்று அவரை கைது செய்து இழுத்து செல்கின்றனர்.  இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Tags :
AIIMSPolice CarrishikeshViral
Advertisement
Next Article