தேன்கூட்டை கலைத்த புறா... திருமணத்தில் கலந்து கொண்டவர்களை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு!
விழுப்புரம் மாவட்டம் திருமங்கலத்தில் கி.பி நான்காம் நூற்றாண்டை சேர்ந்த பிரசித்தி பெற்ற சிதம்பரேஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் முகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் ஐந்து திருமணங்கள் நடைபெற்றுள்ளது. அப்போது கோயிலின் ராஜகோபுரத்தில் இருந்த தேன் கூட்டினை புறா ஒன்று
இறக்கையால் தட்டி விட்டுள்ளது.
இதனால் தேன் கூட்டிலிருந்து வெளியேறிய தேனீக்கள் திருமண விழாவில் கலந்து கொண்டவர்களை துரத்தி துரத்தி கொட்டியுள்ளது. இதில் 30 க்கும் மேற்பட்டோரை தேன் குளவி கொட்டியுள்ளது. இதில் பத்து பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மற்றவர்கள் கடையில் சுண்ணாம்பினை வாங்கி தேன் குளவி கொட்டிய இடத்தில் வைத்தனர். இதனால் திருமண நிகழ்வில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.