"பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு வழங்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நாளை மத்திய தொல்லியல்துறை சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை நிறைவு நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார்.
இதையொட்டி பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று தூத்துக்குடி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"மருத்துவமனையில் இருப்பதால், தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு வழங்கவுள்ள கோரிக்கைகள் அடங்கிய மனுவைத் தலைமைச் செயலாளர் மூலமாகக் கொடுத்து அனுப்பியுள்ளேன்.
அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்குவார்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.