குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல் பேசி அட்டூழியம்! 7 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது!
மத்தியபிரதேசத்தில் குரல் மாற்றும் செயலி மூலம் கல்லூரி பேராசிரியர் போல பேசி 7 பழங்குடியின சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய பிரதேச சிதி மாவட்டத்தில் 30 வயது நபர் ஒருவர் குரல் மாற்றும் செயலி மூலம் பேராசிரியர் போல பேசி 7 பழங்குடியின சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறை கண்காணிப்பாளர் பிரஜேஷ் பிரஜாபதி கூறுகையில்,
குற்றாவாளியை கைது செய்துள்ளோம். அவனுக்கு உதவிய மேலும் இரண்டு பேரையும் கைது செய்துள்ளோம். செல்போனில் குரல்களை மாற்றும் செயலியை பதிவிறக்கம் செய்த குற்றவாளி கல்லூரி பேராசிரியை போல குரலை மாற்றிப் பேசி, ஏமாற்றி இந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் அனைவருமே பழங்குடியினத்தைச் சேர்ந்த மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் எனது மகன் அழைத்து செல்வான் எனக்கூறி, அப்பெண்ணை ஆள்நடமாட்டமில்லாத வனப்பகுதிக்குள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதோடுஅப்பெண்ணிடம் இருந்த செல்போன் போன்றவற்றையும் பறித்து கொண்டர்தோடு, அந்த செல்போனில் இருந்த மற்ற மாணவிகளின் எண்களுக்கும் தொடர்புகொண்டு பேசி வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜனவரி மாதம் முதல் நடந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோதுதான் இது வெளிச்சத்துக்கு வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.