சிலை என நினைத்து முதலையுடன் செல்ஃபி எடுத்த நபர்.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்!
பிரபலமடைவதற்காக அபாயகரமான இடங்களில் செல்ஃபி எடுக்கும் நடைமுறை சமீபத்தில் அதிகரித்து உள்ளது. இவை, பெரும்பாலும் துயரமான சம்பவங்களில் முடிவடைகிறது. இது போன்ற சம்பவம் தற்போது நடந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கபோக் மாங்குரோவ் என்ற உயிரியல் பூங்காவிற்கு 29 வயதான சுற்றுலா பயணி ஒருவர் சென்றார். அங்கிருந்த குளத்திற்குள் குதித்து உள்ளே சென்ற அவர் அங்கு ஓரமாக நின்ற முதலையை சிலை என்று கருதினார்.‘
முதலைகள் பொதுவாக வாயை திறந்தவாறு மணிக்கணக்கில் சிலை போன்று நிற்கும் ஆற்றல் கொண்டது. இவ்வாறு சில முதலைகள் அங்கு ஓரமாக நின்றது. இது அந்த சுற்றுலா பயணிக்கு சிலை போன்று தோன்றியது. அதன் அருகில் சென்ற சுற்றுலா பயணி முதலையுடன் செல்ஃபி எடுத்தார். அப்போது அந்த முதலை திடீரென அவரை தாக்கத் தொடங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத அவர் அதிர்ச்சியடைந்தார். முதலையிடம் இருந்து தப்ப அவர் கடுமையாக போராடினார்.
சுமார் 30 நிமிடங்களாக அவருக்கும் முதலைக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் ஏராளமான பாதுகாவலர்கள் வந்து முதலையிடம் இருந்து அவரை மீட்டனர். முதலை தாக்கியதில் அந்த பயணியின் கை, கால்கள், முதுகு, வயிறு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவர்கள் கூறினர். அவரது உடலில் மொத்தமாக 50 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.