Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகர் ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி, தென்காசி தொகுதியில் ஒருவர் வேட்பு மனு!

11:41 AM Mar 28, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி,  தென்காசி தொகுதியில் மன்மதன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

Advertisement

நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு,  முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதையடுத்து,  அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

தென்காசி தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (மார்ச் - 27 ) ஒரே நாளில் மட்டும் 26 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  அதில் 24 நபர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  இரண்டு நபர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில்,  நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் எனவும்,  நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் எனவும்,  அவரை அரசியலுக்கு அழைத்து வர விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் தான் தற்போது போட்டியிட வந்துள்ளதாக கூறி தென்காசி தொகுதியில் மன்மதன் என்பவர் வேட்புமனுவினை தாக்கல் செய்தார்.  குறிப்பாக, தான் 1 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெறுவது உறுதி எனவும் தெரிவித்தார்.

Tags :
actor rajinikanthElection2024Elections2024LokSabhaElectionnominationTenkasi
Advertisement
Next Article